பொது கழிப்பறையில் இருந்த மின் மோட்டாரை திருடிய வாலிபர் கைது
சிதம்பரத்தில் பொது கழிப்பறையில் இருந்த மின் மோட்டாரை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம்,
சிதம்பரம் பூதக்கேணி பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவரது மகன் அசோக்குமார் (வயது 32). இவர் பள்ளிப்படை பகுதியில் உள்ள ஒரு பொது கழிப்பறையில் இருந்த மின் மோட்டாரை திருடிக்கொண்டு சென்றார். இதைபார்த்த அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அசோக்குமாரை பிடித்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அசோக்குமார் மின்மோட்டாரை திருடியதை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.