டிக்ெகட் பரிசோதகரிடம் பர்சை திருடிய வாலிபர் கைது
டிக்ெகட் பரிசோதகரிடம் பர்சை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சாத்தூர்,
தூத்துக்குடி மாவட்டம் அருணாச்சலபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 43). இவர் தனியார் பஸ் நிறுவனத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் அவர் சாத்தூர் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரது பர்சை திருடிக் கொண்டு ஓடிவிட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை விரட்டி பிடித்து சாத்தூர் நகர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் திருமங்கலம் தாலுகா புளியங்குடியை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 29) என்பது தெரியவந்தது. இது குறித்து சிவசங்கரன் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் போலீசார் புருஷோத்தமனை கைது செய்தனர்.