லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது

திட்டச்சேரியில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-14 18:45 GMT

திட்டச்சேரி:

திட்டச்சேரி கொந்தகை நாகூர் சாலையை சேர்ந்தவர் ஹாஜா (வயது 34). இவர் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக திட்டச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ஹாஜாவை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹாஜாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்