கோவை ராமநாதபுரம் பகுதியில் நஞ்சுண்டாபுரம் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர்கள், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சி.வி.புரத்தை சேர்ந்த விவேகானந்தன் (வயது 26), சுமதி ஆகியோர் என்பதும், இதில் விவேகானந்தன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.