காதல் திருமணம் செய்த மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்த வாலிபர் கைது

காதல் திருமணம் செய்த மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-19 18:30 GMT

காதல் திருமணம்

அரியலூர் மாவட்டம் கீழக்கவட்டாங்குறிச்சியை சேர்ந்தவர் பொன்னுமணி (வயது 26). இவர் கோவையில் உள்ள மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்தபோது திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த ராகுலன் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கீழக்கவட்டாங்குறிச்சியில் வசித்து வந்தனர்.

இதற்கிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராகுலன் பணி நிமிர்த்தம் காரணமாக கும்பகோணம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொன்னு

மணியை பார்ப்பதையும், பேசுவதையும் தவிர்த்து வந்ததுள்ளார்.

கைது

இதையடுத்து, பொன்னுமணி தனது காதல் கணவரிடம் இதுபற்றி கேட்டு உள்ளார். அப்போது அவர் தற்போது பழகி வரும் பெண்ணுடன் தான் வாழ்வேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொன்னுமணி அரியலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, காதல் திருமணம் செய்த பெண்ணுடன் வாழ மறுத்த ராகுலனை கைது செய்தார். பின்னர் அவர் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்