பீர் வாங்கி தர மறுத்தவாலிபருக்கு பாட்டில் குத்து
பீர் வாங்கி தர மறுத்த வாலிபருக்கு பாட்டில் குத்து விழுந்தது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் விஷ்ணு (வயது 26). இவர் சங்கராபுரம், பூட்டை சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பாடு வாங்க சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் மகன் அய்யனார் (வயது 25) என்பவர் அவரை தடுத்து நிறுத்தி பீர் வாங்கி கொடு அல்லது எனக்கு பணம் கொடு என்று கேட்டு மிரட்டி உள்ளார்.
அப்போது, விஷ்ணு பணம் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அய்யனார், அங்கு கிடந்த பீர் பாட்டிலை உடைத்து விஷ்ணுவை வலதுகை பக்கம் குத்திவிட்டார். இதையடுத்து அவர் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, சங்கராபுரம் போலீசில் விஷ்ணுவின் தந்தை கண்ணன் அளித்த புகாரின் பேரில் அய்யனார் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.