விழுப்புரத்தில்பிரபல ரவுடியை கொன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரத்தில் பிரபல ரவுடியை கொலை செய்த வழக்கில் கைதான வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2023-07-15 18:45 GMT


விழுப்புரம் ஜானகிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியன் மகன் சரவணன் (வயது 35). இவர் மீது விழுப்புரம் பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், வழிப்பறி, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த 5.6.2023 அன்று ஜானகிபுரம் அங்காளம்மன் கோவில் அருகே விழுப்புரம் பிடாகம் நத்தமேட்டை சேர்ந்த பிரபல ரவுடியான லட்சுமணன் (39) என்பவரை கொலை செய்தது தொடர்பாக சரவணனை விழுப்புரம் தாலுகா போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரை செய்தார்.

குண்டர் சட்டத்தில் கைது

அதன்பேரில் சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டார். இதையடுத்து சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்