தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய வாலிபர் பிணமாக மீட்பு
விக்கிரமசிங்கபுரம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.
விக்கிரமசிங்கபுரம்:
தூத்துக்குடி தருவைகுளம் ரோடு அரசரடி துப்பாச்சிபட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் சந்தோஷ் (வயது 36). இவர் விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை சந்தோஷ், ஆலடியூர் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அங்கு ஆற்றில் இறங்கி குளித்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சந்தோைச தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. பின்னா் நேற்று மீண்டும் தேடுதல் பணியை தொடங்கினர். அப்போது சந்தோஷ் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடலை விக்கிரமசிங்கபுரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன சந்தோஷிற்கு முத்துவேணி என்ற மனைவியும், கிஷோர் என்ற மகனும் உள்ளனர்.