ஆற்றில் மூழ்கிய வாலிபர் பிணமாக மீட்பு

விக்கிரமசிங்கபுரம் அருகே ஆற்றில் மூழ்கிய வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2023-07-14 18:45 GMT

விக்கிரமசிங்கபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுகிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் விக்னேஷ் (வயது 28). இவர் அங்குள்ள மரக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலையில் தன்னுடைய நண்பர்களுடன் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே ஆலடியூருக்கு சென்றார். அங்குள்ள சுடலைமாட சுவாமி கோவில் அருகில் தாமிரபரணி ஆற்றில் அனைவரும் குளித்தனர்.

அப்போது விக்னேஷ் எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கினார். இதனைப் பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், விக்கிரமசிங்கபுரம், அம்பை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, ஆற்றில் மூழ்கிய விக்னேசை தேடும் பணியில் ஈடுபட்டனர். ரப்பர் படகு மூலமும் சென்று, விக்னேஷ் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டாரா? என்று இரவு வரையிலும் தேடினர். ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை.

தொடர்ந்து நேற்று காலையில் 2-வது நாளாக மீட்பு பணி நடைபெற்றது. நீண்டநேர தேடுதலுக்கு பிறகு, விக்னேஷ் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை விக்கிரமசிங்கபுரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்