எலிபேஸ்ட்டை வைத்து பல் துலக்கிய வாலிபர் சாவு

எலிபேஸ்ட்டை வைத்து பல் துலக்கிய வாலிபர் சாவு

Update: 2022-12-09 20:08 GMT

தஞ்சை அருகே உள்ள கொல்லாங்கரை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 31). இவர் அவரது உறவினர் வீட்டில் தங்கி இருந்து வயல்களுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த 5-ந்தேதி கார்த்திகேயன் பற்பசை என நினைத்து எலிபேஸ்ட்டை வைத்து பல் துலக்கினார். இதில் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பினார். நேற்றுமுன்தினம் கார்த்திகேயனுக்கு மீண்டும் வயிற்றுவலி அதிகமாகி உள்ளது. இதையடுத்து அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அங்குள்ள டாக்டரிடம் தான் தவறுதலாக எலிேபஸ்ட்டை வைத்து பல் துலக்கியதாக தெரிவித்தார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வல்லம் இன்ஸ்பெக்டர் வசந்தா (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கார்த்திகேயனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்