வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது 5 பவுன் நகை மீட்பு

வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா் அவாிடம் இருந்து 5 பவுன் நகை மீட்கப்பட்டது.

Update: 2023-10-17 23:31 GMT

ஈரோடு இடையன்காட்டுவலசு சின்னமுத்து 3-வது வீதியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 40). ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் 25-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும், வீட்டில் இருந்த 5 பவுன் நகையும், ரூ.8 ஆயிரமும் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டில் நகை-பணத்தை திருடிய மர்மநபரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் வீரப்பன்சத்திரம் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோவை மாவட்டம் போத்தனுார் உழவர் சந்தை பகுதியை சேர்ந்த வெங்கடேசனின் மகன் பாலா என்கிற இப்ராகிம் (30) என்பதும், அவர் தான் பிரவீன் வீட்டில் நகை திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 5 பவுன் நகையை மீட்டனர். கைதான இப்ராகிம் மீது 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்