லாரி மோதி வாலிபர் பலி

வாலாஜாவில் லாரி மோதி வாலிபர் பலியானார்.;

Update: 2022-09-21 17:40 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த புதிய செட்டித்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் மோகன் (வயது 30). இவர், வாலாஜா படவேட்டம்மன் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்