ஸ்ரீவில்லிபுத்தூர்,
சிவகாசி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் நாகூர் மைதீன் (வயது35). இவரது நண்பர் ராம்குமார் (28). இவர்கள் 2 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது சாமி நத்தம் அருகே வரும் போது அந்த வழியாக வந்த லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு அந்த லாரி நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் காயம் அடைந்த நாகூர் மைதீன் பரிதாபமாக இறந்தார். ராம்குமார் படுகாயம் அடைந்தார். இவர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.