ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

நாகையில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி

Update: 2023-06-20 18:45 GMT


நாகை மகாலட்சுமி நகர் அருகே உள்ள தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இறந்து கிடந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரெயிலில் அடிபட்டு இறந்தவர் கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரகுபதி என்பவரது மகன் கலாநிதி (வயது 24) என்பது தெரியவந்தது. மேலும் கலாநிதி எப்படி ரெயிலில் அடிபட்டு இறந்தார்? எந்த ரெயிலில் அடிபட்டார்? அல்லது ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகையில் வாலிபர் ரெயிலில் அடிபட்டு பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்