மார்த்தாண்டத்தில் அரிசி கடத்தி சென்ற கார் மோதி வாலிபர் படுகாயம் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மார்த்தாண்டத்தில் ரேஷன் அரிசி கடத்தி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வாலிபர் படுகாயம் அடைந்தார். காரில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-12-20 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் ரேஷன் அரிசி கடத்தி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வாலிபர் படுகாயம் அடைந்தார். காரில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கார் மோதியது

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நேற்று மாலையில் ஒரு கார் சென்றது. அப்போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டு இருந்தது. அதன் மீது கார் மோதியது. மோட்டார் சைக்கிளில் வந்த கேரள மாநிலம் அயிரா பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற வாலிபர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 டன் ரேஷன் அரிசி

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் விபத்தில் சிக்கிய காரை சோதனை போட்டனர். அப்போது அதில் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்ததும், அதை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து 1 டன் ரேஷன் அரிசி மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்