தாம்பரம் அருகே வாலிபர் அடித்துக்கொலை

தாம்பரம் அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-08-30 08:40 GMT

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சரவணகுமார்(வயது 23) மற்றும் அஜித்குமார்(20). உறவினர்களான இவர்கள் இருவரும் சென்னை தாம்பரத்தை அடுத்த புதுபெருங்களத்தூரில் அறை எடுத்து தங்கி, பழைய இரும்பு கடையில் வேலை செய்து வந்தனர். கடந்த 21-ந் தேதி இரவு இருவரும் ஒன்றாக மது அருந்தினர். போதை தலைக்கேறியதும் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.இதில் ஆத்திரமடைந்த அஜித்குமார், சரவணகுமாரை கழுத்தை பிடித்து, சுவரில் இடித்தார். இதில் தலையில் படுகாயமடைந்த சரவணகுமாரை, தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.இது தொடர்பாக, பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சரவணகுமார் நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து பீர்க்கன்காரணை போலீசார் இதை கொலை வழக்காக மாற்றம் செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்