ரோந்து சென்ற போலீசாரிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
ரோந்து சென்ற போலீசாரிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.;
வடகாடு போலீசார் நேற்று பிலாபுஞ்சை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாலன் (வயது 35) என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரை பார்த்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பொது இடத்தில் ஆபாசமாக பேசியதாக, பாலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.