வீட்டிற்குள் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது

கரூரில் வீட்டிற்குள் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-22 19:06 GMT

கரூர் தாந்தோணிமலை தென்றல் நகரில் கஞ்சா பயிரிடப்பட்டு வருவதாக மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டிற்குள் கஞ்சா பயிரிடப்பட்டு இருந்தது தெரியவந்தது.இதையடுத்து, கஞ்சா பயிரிட்டதாக தனுஷ்பாண்டி (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.வீட்டிற்குள் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்