கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-19 20:16 GMT

திருச்சி-மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் நவ்சாத் (வயது 39). இவர் சம்பவத்தன்று மரக்கடை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தை அடுத்த அண்ணாநகரை சேர்ந்த கோழிவிஜய் என்ற விஜய்(23) என்பவர் அங்குவந்து நவ்சாத்திடம் மதுகுடிக்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு பணம் தர மறுத்த நவ்சாத்தை, விஜய் அடித்து உதைத்துள்ளார். மேலும் கத்தியை காட்டி மிரட்டி நவ்சாத்தின் சட்டைப்பையில் இருந்த ரூ.4 ஆயிரத்தை பறித்துச்சென்றார். இதுபற்றிய புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த தில்லைநகர் போலீசார் விஜயை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.4 ஆயிரம் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்