பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் புகுந்து திருமணம் செய்ய வற்புறுத்தி பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-29 18:45 GMT

நாகா்கோவில்:

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் புகுந்து திருமணம் செய்ய வற்புறுத்தி பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண் டாக்டா்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தாா். பின்னர் அவர் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அவர் நேற்றுமுன்தினம் இரவு பணியில் இருந்தபோது நெல்லையை ேசர்ந்த 31 வயதுடைய வாலிபர் ஒருவர் வந்தார்.

அந்த வாலிபர் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெண் டாக்டரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தகராறு செய்தார். டாக்டரை தொடர்ந்து தொந்தரவு செய்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி ஆசாரிபள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கண்டனம்

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து பெண் டாக்டர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் வாலிபரின் பெற்றோரை வரவழைத்து அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

வாலிபர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் விடுவித்ததற்கு பெண் டாக்டாரும், இந்திய கிளினிக் டாக்டர் அசோசியேசன் சார்பிலும் நேற்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த வாலிபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்த சம்பவத்தால் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்