அரசு பஸ் ேமாதி வாலிபர் பலி

தூசி அருகே அரசு பஸ் ேமாதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2023-07-02 13:22 GMT

தூசி

சென்னை காட்டுப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35),

சென்னை கோவூர் பகுதியில் உள்ள கான்கிரீட் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இளவரசி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் சக்திவேல் நேற்று காலை திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகரில் இறந்த நண்பனின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இரவு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பினார்.

வந்தவாசி -காஞ்சீபுரம் சாலையில் தூசி அருகே மாங்கால் கிராமம் தர்மசத்திரம் எதிரில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் சென்னையில் இருந்து வந்தவாசி நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூசி போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சக்திவேலின் மனைவி இளவரசி தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்