மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-04-29 19:22 GMT

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள தாமரைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 28). இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் புன்னம் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாலையோரமாக வந்து கொண்டிருந்தார். அப்போது கரூர் செல்லாண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (29) என்பவர் ஓட்டி வந்த கார், கவுதம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கவுதம் படுகாயம் அடைந்து கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கவுதமின் தந்தை வேல்முருகன் ெகாடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் விபத்தை ஏற்படுத்திய சவுந்தர்ராஜன் மீது வழக்குப்பதிந்து, அந்த காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்