மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலியானார்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த ஜங்கலாபுரம் காப்பிகார வட்டம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் பார்த்திபன் (வயது 23). இவர், நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்றார். டி.வீரப்பள்ளி அருகே தனியார் பள்ளி எதிரில் சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி பார்த்திபன் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.