மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி

மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி;

Update: 2023-07-29 18:45 GMT

வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு கிராமத்தை சோ்ந்தவர் தனசாமி. இவரது மகன் குப்புசாமி (வயது27). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார்சைக்கிளில் உம்பளச்சேரியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வடக்கு ராமா் வாய்க்கால் அருகே வந்த போது மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி குப்புசாமி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குப்புசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்