ஏரல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு
ஏரல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ஏரல்:
தூத்துக்குடி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் பூவரசன் (வயது 25). இவர் தனியார் கியாஸ் கம்பெனியில் வேன் டிரைவராக உள்ளார். நேற்று மதியம் பூவரசன் தனது நண்பர்களுடன் ஏரல் தாமிரபரணி ஆற்றில் பாலத்துக்கு மேல்பக்கம் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற பூவரசன் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.