கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு

விக்கிரவாண்டி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் இறந்தாா்.

Update: 2023-05-09 18:45 GMT

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அருகே உள்ள பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மணிகண்டன்(வயது 22). இவர், நேற்று தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள ராமலிங்கம் என்பவரது விவசாய கிணற்றில் குளித்தார். அப்போது கிணற்றில் மூழ்கி, மூச்சுத்திணறி மணிகண்டன் பலியானார். இது பற்றி தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் விரைந்து சென்று, கிராம மக்கள் உதவியுடன் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்