கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு

மூங்கில்துறைப்பட்டுஅருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் இறந்தாா்.

Update: 2022-09-30 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு:

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள தொழுவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி மகன் விஜி (வயது 27). இவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு உள்ள கிணற்றில் விஜி தவறி விழுந்தார். நீச்சல் தெரியாமல் தளித்தளித்த அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்