கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

தூசி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2023-06-09 10:49 GMT

தூசி

காஞ்சீபுரம் பல்லவர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ், பட்டு நெசவு தொழிலாளி. இவரது மகன் தேவா (வயது 26), காஞ்சீபுரத்தில் உள்ள பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று மாலை நண்பர்களுடன் தூசியை அடுத்த மாமண்டூர் கிராமத்தில் உள்ள ராமன் என்பவர் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது நண்பர்கள் கிணற்றின் மேல் வந்து பார்த்தபோது தேவா மட்டும் வராததால் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் நண்பர்கள் அங்கிருந்தவர்கள் உதவியுடன் காஞ்சீபுரத்தில் உள்ள தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து தேவாவை பிணமாக மீட்டனர்.

இதையடுத்து தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் ஆகியோர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்