கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி;

Update: 2023-05-31 19:15 GMT

ஆனைமலை

ஆனைமலையை அடுத்த காளியாபுரம் செல்லப்புள்ளகரடு பகுதியை சேர்ந்தவர் முருகேஷ்(வயது 26). கூலித்தொழிலாளி. இவருக்கும், காளீஸ்வரி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று. ஆனால் குழந்தை இல்லை. இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி பிரிந்தனர். இந்த நிலையில் முருகேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று தனியார் தோட்டத்திற்கு குடிபோதையில் சென்ற அவர், அங்கிருந்த கிணற்றின் மீது அமர்ந்திருந்தார். அப்போது திடீரென கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். தொடர்ந்து நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி முருகேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்