கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

கிணற்றில் மூழ்கி வாலிபர் பலியானார்.

Update: 2023-04-03 19:26 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் குமரன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன் மாரியப்பன் (வயது 23). இவர் கோவையில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் தற்போது உறவினர்களுடன் விவசாய பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில் இவரது உறவினர் தங்கராஜ் என்பவருடன் அருகே உள்ள நவாமலை பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கினார். உடனே தங்கராஜ் அளித்த தகவலின் பேரில் சேத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்புக்குழுவினரின் உதவியுடன் அவரது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்