மதுக்கூர்
மதுக்கூர் அருகே உள்ள பெரியக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்த இளங்கோ மகன் பிரவீன்(வயது21). நேற்றுமுன்தினம் இரவு இவர் தனது மொபட்டில் மதுக்கூர் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வடுகண்குத்தகை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வேக கட்டுப்பாட்டு அறிவிப்பு பலகை கம்பத்தில் மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரவீன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பிரவீன் தாயார் ஆனந்தி மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.