மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
தூத்துக்குடி மாவட்டம் நரசிங்கன்விளை தெற்கு ஆத்தூரை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் மகன் முத்துராஜா (வயது 24). இவர் நேற்று மாலையில் வீரபாண்டியபட்டினத்தை சேர்ந்த மகேஷ் (22), நாசரேத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் (31) ஆகியோருடன் நெல்லை கிருஷ்ணாபுரம் அருகே மேட்டுக்குடி விலக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முத்துராஜா சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மற்ற 2 பேரும் படுகாயத்துடன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சிவந்திப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.