காட்டுப்பன்றி மோதி காயமடைந்த வாலிபர் சாவு

நெமிலி அருகே காட்டுப்பன்றி மோதி காயமடைந்த வாலிபர் இறந்தார்.

Update: 2023-05-16 19:01 GMT

அரக்கோணத்தை அடுத்த வேலூர்பேட்டை கிராமத்தை சார்ந்தவர் துளசிராமன் (வயது 35). பனப்பாக்கத்தில் உள்ள ஸ்வீட் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் நெமிலி உளியநல்லூர் கிராமத்தை சேர்ந்த அலமேலு (29) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. துளசிராமன் தன்னுடைய மாமியார் ஊரான உளியநல்லூர் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டாக தன் மனைவியுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் பனப்பாக்கத்தில் இருந்து உளியநல்லூர் சென்றுகொண்டிருந்தார். துறையூர் ஏரிக்கரை அருகே சென்றபோது காட்டுப்பன்றி மோதி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்