ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்தார்

Update: 2022-09-09 12:52 GMT

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் ரயில்வே கேட் பகுதியில் நேற்று காலை ரயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மயிலாடுதுறை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ரயிலில் அடிபட்டு இறந்தவர் குத்தாலம் தாலுகா தேரழுந்தூர் பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்து மகன் பிரதீப் (வயது 25) என்பதும், இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டே கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தொலைதூரக் கல்வி மூலம் எம்.பி.ஏ., படித்து வந்ததும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தேரழுந்தூருக்கு வந்ததும் தெரிய வந்தது. மேலும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ளவர்களிடம் பிரதீப் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது. ஆகவே, அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதீப், கபடி விளையாட்டு வீரர் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்