விபத்தில் வாலிபர் பலி

நாங்குநேரி அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2023-05-27 20:04 GMT

நாங்குநேரி:

முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை சேர்ந்தவர் சேகர் பனிராஜ் மகன் அந்தோணி விஜய் (வயது 23). இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் திருவனந்தபுரத்தில் இருந்து மோட்டாா் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். நாங்குநேரி அருகே உள்ள தாழைகுளத்தில் வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த கார் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அந்தோணி விஜய் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்