தூத்துக்குடி அருகே உள்ள குளத்தூர் தெற்கு பனையூரை சேர்ந்தவர் சண்முகராஜ். இவருடைய மகன் கருப்பசாமி (வயது 22). பொன்லைன் எந்திர ஆபரேட்டர். இவர் நேற்று முன்தினம் இரவு பனையூரில் இருந்து வேப்பலோடை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, திருச்செந்தூரில் இருந்து விளாத்திகுளம் நோக்கி 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த கருப்பசாமி மீது அங்கு வந்த லாரியும் மோதியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே கருப்பசாமி பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இலந்தைகுளத்தை சேர்ந்த முத்துராஜ் (24), ஆனந்த் (20) ஆகிய 2 பேரும் பலத்தகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.