விபத்தில் வாலிபர் பலி

திருத்தங்கல் அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2022-11-11 19:02 GMT

சிவகாசி, 

திருத்தங்கல் சத்யா நகரை சேர்ந்த கோவிந்தமூர்த்தி மகன் ராமர் (வயது 20). அருந்ததியர் தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் பாண்டி (30). மேலத்தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் ராஜராஜேஸ்வரன் (23) என்கிற ஈஸ்வரன். இவர்கள் 3 பேரும் பேண்ட் வாத்திய குழுவில் பணியாற்றி வருகிறார்கள். விளம்பட்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் ராமர், பாண்டி, ராஜராஜேஸ்வரன் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ராஜராஜேஸ்வரன் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இந்த விபத்து குறித்து ராமர் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்