தேவூர் அருகே விபத்தில் வாலிபர் பலி
தேவூர் அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.;
தேவூர்,
தேவூர் அருகே சென்றாயனூர் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் அருள் (வயது 19), கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை தனது நண்பர் லட்சுமணனுடன் (20) எடப்பாடி பகுதியில் இருந்து கல்வடங்கம் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் நேற்று சென்றார்.
அதேநேரத்தில் ஒக்கிலிப்பட்டி பகுதியை சேர்ந்த லட்சுமி தனது மகளுடன் தண்ணிதாசனூருக்கு மொபட்டில் சென்றார். ஒக்கிலிப்பட்டி பஸ் நிறுத்த பகுதியில் கல்வடங்கம் செல்லும் சாலையை மொபட்டில் அவர் கடந்து செல்ல முயன்றார். அப்போது அருள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மொபட்டுடன் உரசியபடி சென்றது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் அருள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். லட்சுமணன் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தேவூர் போலீசார் அங்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த லட்சுமணனை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ெமாபட்டில் சென்று காயம் அடைந்த லட்சுமியும், அவரது மகளும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.