மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-06-22 18:20 GMT

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 28). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை செங்கம் சாலையில் அய்யம்பாளையம் அருகில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கார் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

காரில் வந்த 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

மேலும் இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுந்தரேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்