கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு
திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறை நல்லேந்திரபுரத்தை சேர்ந்தவர் நாட்ராயன். கூலித்தொழிலாளி. இவரது மகன் கவுதம புத்தர் (வயது 18). இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இரவு வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. உடனே அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் கவுதம புத்தர் பிணமாக மிதந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் திண்டுக்கல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர். இதையடுத்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன், ஏட்டு கருணாகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.