கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி

எரியோடு அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-11-23 16:42 GMT

எரியோடு அருகே உள்ள சாமிமுத்தன்பட்டியை சேர்ந்தவர் அருண்செபஸ்தியன் (வயது 21). மில் தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை இவர், அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றை அவர் எட்டி பார்த்ததாக கூறப்படுகிறது. இதில், கால் இடறி கிணற்றுக்குள் அருண்செபஸ்தியன் தவறி விழுந்தார். கிணற்றில் தண்ணீர் இருந்த நிலையில், நீச்சல் ெதரியாததால் அவர் நீரில் மூழ்கினார்.

இதற்கிடையே தோட்டத்திற்கு சென்ற அருண்செபஸ்தியன் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் கிணற்றில் விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள், கிணற்றில் விழுந்த அருண்செபஸ்தியனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கிணற்றின் சேற்றில் சிக்கியிருந்த அருண் செபஸ்தியனின் உடலை இரும்பு கொக்கி மூலம் தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர். கிணற்றில் தவறி விழுந்த அருண்செபஸ்தியன் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்