கண்மாயில் தவறி விழுந்து வாலிபர் சாவு

பொன்னமராவதி அருகே கண்மாயில் தவறி விழுந்து வாலிபர் பலியானார்.

Update: 2022-07-05 19:14 GMT

கண்மாய்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், காட்டுப்பட்டி ஊராட்சி நல்லம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் ஆனந்த் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் புதுவளவு பகுதியில் உள்ள ஹாலோபிளாக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பொன்புதுப்பட்டி அருகே அம்பலக்காரன் கண்மாயில் நேற்று மதியம் 1:30 மணியளவில் கடையில் வைத்திருந்த தனக்கு சொந்தமான சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்வதாக கிளம்பி உள்ளார்.

இந்நிலையில் சேங்கை ஊரணி மேற்கு பகுதியில் உள்ள அம்பலகாரன் கண்மாய் அருகே சென்றதை உறவினர்கள் பார்த்துள்ளனர். மேலும் குளத்துப்பகுதியில் சென்றவர் திடீரென காணவில்லை. மேலும் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளும், அவர் அணிந்திருந்த காலணியும் கரையில் கிடந்தது தெரிய வந்தது.

வாலிபர் உடல் மீட்பு

நீண்ட நேரம் ஆகியும் ஆனந்த் கரைக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் ஆனந்தை தேடத்தொடங்கினர். மேலும் தகவல் அறிந்து வந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு நிலைய வீரர்கள் நங்கூரம் மூலம் தேடிப்பார்த்தனர்.

அப்போது ஆனந்தின் உடல் சிக்கியது. பின்னர் உடலை கைப்பற்றி வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்