பரங்கிமலை அருகே ஓடும் மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

பரங்கிமலை அருகே ஓடும் மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-09-22 12:49 IST

சென்னையை அடுத்த குன்றத்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 21). இவர், தனியார் நிறுவனத்தில் குளிர்சாதன பழுது பார்க்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயிலில் பயணம் செய்தார். கிண்டியில் இருந்து பரங்கிமலை நோக்கி மின்சார ரெயில் செல்லும்போது, படிக்கட்டு அருகே நின்றிருந்த மோகன்குமார் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த மோகன்குமார் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்