ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-06-30 20:00 GMT

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள சுவாமி மல்லம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் அருண்குமார் (வயது 21). பட்டதாரி வாலிபர். அருண்குமார் தனது மோட்டார் சைக்கிளில் மேலக்கோட்டை பெட்ரோல் பங்க் அருகே வந்தார். அங்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அங்குள்ள தண்டவாளம் அருகில் நின்றிருந்தார். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி சென்ற இண்டர்சிட்டி ெரயில் திருமங்கலம் நோக்கி வந்தது. இந்நிலையில் திடீரென அருண்குமார் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விருதுநகர் ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினையில் அருண்குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்