தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
மகள் இறந்த சோகத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி,
சிவகாசி மேற்கு எஸ்.பி.ஐ. காலனியை சேர்ந்தவர் செந்தில் முருகன் (வயது 37). இவர் தனியார் வங்கியில் கடன் வாங்கி கொடுக்கும் வேலையை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இவரது மகள் ஸ்ரீநிதி (11) உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட செந்தில்முருகன் சம்பவத்தன்று வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் ஆனந்தவள்ளி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.