திருமணமான ஒரே ஆண்டில் கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

திருமணமான ஒரே ஆண்டில் கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-07-02 21:01 GMT

சோழவந்தான்

சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுமலை. இவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 27). இவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் தினேஷ்குமாருக்கு கடந்த ஆண்டு காதல் திருமணம் நடந்தது எனவும், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்ததும் ெதரிய வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்