சித்தாமூர் அருகே சுவரில் துளை போட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை

சித்தாமூர் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

Update: 2023-09-10 22:44 GMT

சித்தாமூர்,

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த பழவூரில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு மேற்பார்வையாளராக சதாசிவம் இருந்து வருகிறார். மேலும் 4 விற்பனையாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வியாபாரம் முடிந்து கடையை மூடிவிட்டு சென்றுவிட்டனர். நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் டாஸ்மாக் கடை சுவரில் துளை போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மதுபாட்டில் கொள்ளை

இது குறித்து அவர்கள் கடையின் மேற்பார்வையாளர் சதாசிவத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சதாசிவம், டாஸ்மாக் கடைக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு இருந்த மது பாட்டில்கள், பணம் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ.13 ஆயிரம் ஆகும். இது குறித்து சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்