நமச்சிவாயபுரத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும்

பெ.புதுப்பட்டியில் இருந்து நமச்சிவாயபுரத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-23 20:19 GMT

காரியாபட்டி

பெ.புதுப்பட்டியில் இருந்து நமச்சிவாயபுரத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளை பொருட்கள்

காரியாபட்டி தாலுகா பெ.புதுப்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து நமச்சிவாயபுரம், பந்தனேந்தல், ஜோகில்பட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் 7 கி.மீ. தூரம் கிருஷ்ணாபுரம் வழியாக தான் செல்ல வேண்டும்.

மேலும் பெ.புதுப்பட்டி கிராமத்தில் விளையும் விளை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றால் அருப்புக்கோட்டை அல்லது விருதுநகருக்கு தான் கொண்டு செல்ல வேண்டும்.

சாலை வேண்டும்

விவசாய பொருட்களை எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக பெ.புதுப்பட்டி கிராமத்தில் இருந்து குண்டாற்றின் வழியாக பாலம் அமைத்து தார் சாலை அமைத்தால் 1 கி.மீ. தூரத்தில் நமச்சிவாயபுரம் கிராமம் வழியாக அருப்புக்கோட்டை, விருதுநகர் செல்ல முடியும்.

மேலும் பல்வேறு கிராமங்களையும் இணைக்கும் சாலையாகவும் அமையும். ஆதலால் விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி குண்டாற்று பகுதியில் பாலம் அமைத்து தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்