நெல்கொள்முதல் நிலையத்தில் மூடப்பட்ட தார்ப்பாய் தீப்பிடித்து எரிந்தது
நெல்கொள்முதல் நிலையத்தில் மூடப்பட்ட தார்ப்பாய் தீப்பிடித்து எரிந்தது;
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவில்பத்து சிவன் கோவில் வளாகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகள் தார்ப்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை நெல்மூட்டைகள் மீது மூடப்பட்ட தார்ப்பாய் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். தகவல் அறிந்ததும் நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். இந்த விபத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்மணிகள் சேதமடையவில்லை. மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.