மத்திகிரி:-
ஓசூர் அருகே பூனப்பள்ளியை சேர்ந்தவர் வினய்குமார் (வயது 38). துணி தைக்கும் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மனம் உடைந்த வினய்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.